/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : பிப் 03, 2024 06:11 AM

சாத்துார் : சாத்துார்- கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் சாய் பாபா கோயில் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
சாத்துார் நகராட்சிக்கு சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நாள்தோறும் 30 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட வேண்டும்.
குடிநீர் குழாயில் உடைப்பு மற்றும் மின்மோட்டார் பழுது காரணமாக நாள்தோறும் 15 முதல் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வருகிறது.
இவ்வாறு வரும் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுவது தொடர் கதையாகி வருகிறது. சடையம்பட்டி ஊராட்சியில் சாய்பாபா கோயில் அருகே தற்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி காட்டுப்பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதன் காரணமாக நகராட்சிக்கு வரும் குடிநீரின் அளவு கணிசமாக குறைவதுடன் நகரில் மீண்டும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் உடைந்துள்ள குடிநீர் குழாய் வழியாக மண் கலப்பதால் குடிநீரின் நிறம் சுவை மாறி விடும் அபாயம் உள்ளது.
எனவே குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

