/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறக்கப்படாத சுகாதார வளாகம், பன்றிகள் உலா, முடிவடையாத ரோடு
/
திறக்கப்படாத சுகாதார வளாகம், பன்றிகள் உலா, முடிவடையாத ரோடு
திறக்கப்படாத சுகாதார வளாகம், பன்றிகள் உலா, முடிவடையாத ரோடு
திறக்கப்படாத சுகாதார வளாகம், பன்றிகள் உலா, முடிவடையாத ரோடு
ADDED : மார் 14, 2024 02:58 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி 25வது வார்டில் காட்சி பொருளாக உள்ள மகளிர் சுகாதார வளாகம், குறுக்கு பாலத்தில் பாதாள சாக்கடை குழாய்களால் சிரமம், சந்து தெருக்களில் ரோடு பணிகள் முடிவடையாமல் சிக்கல் என பல்வேறு குறைபாடுடன் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.
ராஜபாளையம் நகராட்சி 25 வது வார்டில் புதுக்குடி தெரு, அண்ணா நகர், காமாட்சி அம்மன் கோயில் தெரு, சவுந்திர பாண்டியர் நகர், பூமாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளை கொண்டது இந்த வார்டு.
மலையை ஒட்டிய பகுதியில் அடித்தட்டு மக்கள் அதிகம் உள்ளதால் தனி கழிப்பறைக்கு வசதியின்றி குடியிருப்பு அருகே திறந்த வெளியாக உபயோகிக்கின்றனர். ரேஷன் கடைக்கும், அங்கன்வாடிக்கும் சொந்த கட்டடம் இல்லாமல் வாடகையில் இயங்கி வருகிறது. மலையை ஒட்டிய மேடான பகுதியில் சாக்கடை அடைத்து மழைக்காலங்களில் தெருக்களில் கழிவுகள் வெளியேறுகிறது.
மகளிர் சுகாதார வளாகம் குடியிருப்பை விட்டு தொலைவில் ரயில்வே பாதையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளதால் பயன்படுத்த முடியாத சிக்கல் உள்ளது. திருட்டு, கொள்ளை பிரச்சனைகள் அதிகம் உள்ளது. தொடர் ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாததால் அவசர நேரத்தில் ஆட்டோக்கள் ஆம்புலன்ஸ்களும் வந்து செல்ல வழியில்லை.

