/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேளாணுாரணியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தொடங்க வேண்டும்
/
வேளாணுாரணியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தொடங்க வேண்டும்
வேளாணுாரணியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தொடங்க வேண்டும்
வேளாணுாரணியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தொடங்க வேண்டும்
ADDED : அக் 17, 2024 04:57 AM
நரிக்குடி: வேளாணுாரணியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தொடங்க வேண்டும். துவங்காவிட்டால் மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவோம் என ஒன்றியதுணைத் தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.
நரிக்குடியில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் காளீஸ்வரி தலைமையில், துணைத்தலைவர் ரவிச்சந்திரன் பி.டி.ஓ.,கள் சத்தியசங்கர்,சண்முகப்பிரியா முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
போஸ், அ.தி.மு.க.: உழுத்திமடை ஊராட்சிக்கு உட்பட்ட 12 கிராம மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நீண்ட தூரம் சென்று வருவதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். துணை சுகாதார நிலையம் ஏற்படுத்த வேண்டும்.
கவிதா, அ.தி.மு.க,,: துவக்க பள்ளியில் உள்ள பழைய கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். குண்டு குளம் பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம் வருகிறது. கூடுதல் டிரான்ஸ்பார்மர் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிச்சந்திரன், துணைத் தலைவர்: வேளாணூரணியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இல்லாததால் 70க்கு மேற்பட்ட மாணவர்கள் 3 கி.மீ., தூரம் உள்ள இலுப்பையூர்அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கின்றனர். மழை, வெயிலுக்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். சிலர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
நடந்து செல்லும் மாணவர்களுக்கு வாகனங்களால் விபத்து அச்சம் உள்ளது. பல போராட்டங்கள் நடத்தியும் கண்டு கொள்ளவில்லை. இனியும் காலம் தாழ்த்தினால் மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என கூட்டத்தின் வாயிலாக எச்சரிக்கை விடுக்கிறேன்.
உதவி தொடக்க கல்வி அலுவலர்: விரைவில் பணிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

