/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் கன்றுக்குட்டியை கடித்துக் கொன்றது சிறுத்தை கேமரா பொருத்தி வனத்துறை கண்காணிப்பு

ADDED : நவ 02, 2024 02:53 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பிள்ளையார் நத்தம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவத்தையடுத்து அப்பகுதியில் கேமரா அமைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு பிள்ளையார் நத்தம் மலை அடிவாரப் பகுதியில் ரெங்கர்தீர்த்தம் பகுதியில் உள்ள தோட்டத்தில் கட்டி போடப்பட்டிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்துக் கொன்றது.
வனச்சரகர் செல்வமணி தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாட்டத்திற்கான தடத்தினை கண்டறிந்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து வனச்சரகர் செல்வமணி கூறுகையில்,
மாலை நேரங்களில் மலையடிவார தோப்புகள், ரிசர்வ் பாரஸ்ட் பகுதிகளுக்குள் மக்கள் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். மலை அடிவாரப் பகுதிகளுக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும், என்றார் .