/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சத்துணவு ஊழியர்களுக்கும் 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் மாநில பொதுச்செயலாளர் பேட்டி

ADDED : செப் 26, 2024 04:29 AM
விருதுநகர்: அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் சத்துணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்க வேண்டும், என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் நுார்ஜஹான் கூறினார்.
அவர் கூறியதாவது:
சத்துணவு திட்டம் உலகம் போற்றும் திட்டமாக மாறியதற்கு காரணமே அதன் ஊழியர்கள் தான். பாத்திரங்கள், சமையலறை என எல்லா வசதியும் எங்களிடம் உள்ளதால் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமே அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தோம். ஆனால் அரசு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது.
எனவே எங்களது நீண்ட நாள் கோரிக்கையானகாலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும். ஆண் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிகள் வழங்க வேண்டும். அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் சத்துணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள்வழங்க வேண்டும்.
60 ஆயிரத்திற்கும் மேற்பட்டகாலிப்பணியிடங்கள் உள்ளன. இதை சரி செய்ய கோரி அரசிடம் பலமுறை கோரிக்கையும், தொடர் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகிறோம். தீர்வு இல்லை. தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல் ரூ.6750ஆக ஓய்வூதியத்தை உயர்த்தி அகவிலைப்படி உடன்வழங்க வேண்டும்.
அனைத்து அரசு துறை காலிப்பணியிடங்களிலும்தகுதி வாய்ந்த அமைப்பாளருக்கு பணிமூப்பு அடிப்படையில் பணி நியமனம் வேண்டும். சமூக நலத்துறையில் மட்டும் நியமிப்பதால் ஓய்வு பெறும் நேரத்தில் தான் பதவி உயர்வு கிடைக்கிறது.
இந்த கோரிக்கைகளை உள்ளடக்கி அனைத்து மாவட்டங்களில் மாவட்ட மாநாடு நடத்திவருகிறோம் என்றார்.