/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி கோயிலில் 1008 சங்காபிஷேகம்
/
இருக்கன்குடி கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED : டிச 16, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று அம்மனுக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது.
கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி தலைமை வகித்தார். கோயில் உதவி ஆணையர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வரவேற்றனர்.
கோயிலில் மண்டபத்தில் அதிகாலை முதலே சிறப்பு கணபதி ஹோமத்தை தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளில் புனித நீரை நிரப்பி ஓம் வடிவத்தில் அலங்கரித்தனர். பின்னர் 12:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை அம்மனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது.

