/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது
/
பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது
ADDED : ஏப் 30, 2024 12:13 AM

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் திருமணத்திற்கு நிர்பந்தித்து பாண்டிசெல்வி 26,மீது மண்ணெண்ணை ஊற்றி எரிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம் முத்து கொத்தனார் தெருவை சேர்ந்த பெருமாள் சாமி. இவருக்கு மூன்று மகள்கள். இளைய மகள் பாண்டிச்செல்வி கணவருடன் கருத்து வேறுபாடால் பிரிந்து தாய் வீட்டில் தங்கி ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு பேஸ்புக் மூலம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த குணசேகரன் 26, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவருடைய நடவடிக்கை பிடிக்காமல் விலக முயற்சித்தவரை குணசேகரன் திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்த பாண்டி செல்வியை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள நிர்பந்தித்து ஒத்துக் கொள்ளாததால் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை பாண்டிச்செல்வி மீது ஊற்றி தீ வைத்து தப்பி ஓடினார்.
இதில் பாண்டி செல்விக்கு முகம், கழுத்து மார்பு கைகளில் தீக்காயமும் தடுக்க முயன்ற சகோதரி பாண்டீஸ்வரிக்கு கைகளில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் பதுங்கி இருந்த குணசேகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

