/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற எம்.பி.,க்கள் முயற்சி செய்வார்களா
/
காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற எம்.பி.,க்கள் முயற்சி செய்வார்களா
காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற எம்.பி.,க்கள் முயற்சி செய்வார்களா
காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற எம்.பி.,க்கள் முயற்சி செய்வார்களா
ADDED : ஏப் 11, 2024 06:24 AM
அருப்புக்கோட்டை : கரூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி மாவட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி., க்கள் முயற்சி செய்வார்களா என விவசாய சங்க கூட்டமைப்பினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்ட தலைவர் ராம்பாண்டியன் : காவிரி ஆறு வரும் வழியில் கரூர் அருகே மாயனூர், தெற்கு வெள்ளாறு, சிவகங்கை, மானாமதுரை, காரியாபட்டி, புதுப்பட்டி வரை கால்வாய் வெட்டி குண்டாற்றில் இணைக்க திட்டமிடப்பட்டது. இந்த தடுப்பணை மூலம் வரும் நீர் வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும்.
பல ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர், கடந்த ஆட்சியில் இந்த திட்டம் செயல்பட்டு கால்வாய் வெட்டும் பணி துவங்கப்பட்டது. இதன் மூலம் 7 மாவட்டங்களின் மேட்டுப்பகுதி நிலங்கள் முழு பாசனம் அடையும். அதன் மூலம் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் உள்ள விளை நிலங்களுக்கு காவிரி உபரி நீர் வந்தடையும் என, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், பழையபடி இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த முறை வெற்றி பெற்ற 7 மாவட்ட எம்.பி., க்களும் இந்த திட்டம் நிறைவேற்ற எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. மாநில அரசு இந்த ஆண்டு இந்தத் திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. குறைந்தபட்சம் இந்த தேர்தலில் கூட, இண்டியா கூட்டணியில் இந்த திட்டத்திற்கான தேர்தல் வாக்குறுதியும் இல்லை. அ.தி.மு.க., வில் இந்த திட்டம் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளனர். விவசாயிகளின் நலன் கருதி, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என்றார்.

