/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
என்னை வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்த் ஆத்மா சாந்தியடையும்
/
என்னை வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்த் ஆத்மா சாந்தியடையும்
என்னை வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்த் ஆத்மா சாந்தியடையும்
என்னை வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்த் ஆத்மா சாந்தியடையும்
ADDED : ஏப் 02, 2024 06:35 AM
சிவகாசி : எனக்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்த் ஆத்மா சாந்தியடையும். என தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரன் தந்தை விஜயகாந்தின் பட வசனத்தை பேசி ஓட்டு சேகரித்தார்.
சிவகாசி அருகே எரிச்சநத்தம், நடையனேரி, எம்.புதுப்பட்டி, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்த விஜய பிரபாகரன் பேசியதாவது, உங்களை பார்த்து பேசுவது எனது சொந்தக்காரர்களிடம் பேசுவது போல் உள்ளது. விருதுநகர் தொகுதியில் குடிநீர், பஸ் வசதி இல்லாதது உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைகள் உள்ளது.
பட்டாசு தயாரிக்க பேரியம் நைட் பயன்படுத்தக் கூடாது என பட்டாசு தொழில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. லைட்டர் பயன்படுத்துவதால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் நீங்கள் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்த நபர் என்ன செய்தார் என தெரியவில்லை.
ஆனால் நான் 100க்கு 200 சதவீதம் என்னால் முடிந்ததை நிச்சயமாக செய்வேன்.. துளசி கூட வாசம் மாறும், ஆனால் தவசி பிள்ளையின் வாக்கு மாறாது.
பாராளுமன்றத்தில் தே.மு.தி.க., உறுப்பினர் இருக்க வேண்டும் என்பது கேப்டனின் நீண்ட நாள் கனவு.
எனவே எனக்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்தால் அவரின் ஆத்மா சாந்தியடையும். நீங்கள்தான் எனக்கு தாய் தந்தை., இவ்வாறு அவர் பேசினார்.

