/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விளைச்சல் இருக்கு... விலையும் இருக்கு... கத்தரிக்காய் விவசாயிகள் மகிழ்ச்சி
/
விளைச்சல் இருக்கு... விலையும் இருக்கு... கத்தரிக்காய் விவசாயிகள் மகிழ்ச்சி
விளைச்சல் இருக்கு... விலையும் இருக்கு... கத்தரிக்காய் விவசாயிகள் மகிழ்ச்சி
விளைச்சல் இருக்கு... விலையும் இருக்கு... கத்தரிக்காய் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 28, 2024 05:29 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் பெய்த மழைக்கு பின் தற்போது கத்தரிக்காய் நடவில் நல்ல விளைச்சல் கிடைத்து அதற்கான விலையும் கிடைத்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விருதுநகரை சுற்றியுள்ள பகுதிகளில் மானாவாரி பயிர்களான சோளம், கம்பு, துவரை, பாசிப்பயறு ஆகிய பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுவிட்டது. மாவட்டத்தில் டிச. 18, 19 ஆகிய இரு தேதிகளில் 10 ஆண்டுகளுக்கு பின் பெய்த கனமழையால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
இந்நிலையில் விருதுநகர் அருகே கெப்பிலிங்கம்பட்டி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கத்தரிக்காய் நடவு செய்து பறிப்பு நடந்து வருகிறது. ஒரு ஏக்கரில் நிலத்தை உழவு செய்து தயார் படுத்துதல், விதை, களை பறிப்பு, வேலையாட்கள் கூலி ஆகிய செலவுகளுக்கு ரூ. 42 ஆயிரம் செலவாகிறது.
விவசாயி வேல்முருகன் கூறியதாவது:
தற்போது கத்திரிக்காய், பாகற்காய் பறிப்பு நடந்து வருகிறது. தினமும் 60 முதல் 65 கிலோ எடையில் இரண்டு மூடைகளில் கத்தரிக்காய் பறிக்கப்பட்டு மார்கெட் சென்று விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய் கிலோவுக்கு ரூ. 20 முதல் 30 வரை கிடைக்கிறது.
மேலும் கெப்பிலிங்கம்பட்டி, சுற்றியுள்ள பகுதிகளில் கத்தரிக்காய் நடவு செய்தவர்களுக்கு நல்ல விளைச்சல் கிடைத்து விலையும் கிடைப்பதால் இந்த முறை கத்தரிக்காய் நடவு லாபம் தருவதாக உள்ளது, என்றார்.

