/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாம்பல் நிற அணில்கள் ஸ்ரீவி., மலைப்பகுதியில் கணக்கெடுப்பு
/
சாம்பல் நிற அணில்கள் ஸ்ரீவி., மலைப்பகுதியில் கணக்கெடுப்பு
சாம்பல் நிற அணில்கள் ஸ்ரீவி., மலைப்பகுதியில் கணக்கெடுப்பு
சாம்பல் நிற அணில்கள் ஸ்ரீவி., மலைப்பகுதியில் கணக்கெடுப்பு
ADDED : ஏப் 10, 2024 06:17 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பக வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்களின் கணக்கெடுப்பு நேற்று முதல் துவங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் 1989ல் துவக்கப்பட்டது. இங்குள்ள சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை குறித்து இன்றும், நாளையும் முதல் கட்ட கணக்கெடுப்பு நடக்கிறது.
இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் நேற்று காலை 11:00 மணிக்கு பயிற்சி வகுப்பு புலிகள் காப்பகத் துணை இயக்குனர் தேவராஜ் தலைமையில் நடந்தது. ஊட்டி அரசு கலைக் கல்லூரி வனவியல் துறை மாணவர்கள் 20 பேர் பங்கேற்றனர்.
இவர்கள் இன்று வனப்பகுதியை கடந்து தனியார் பட்டா நிலங்களில் உள்ள அணில்களின் எண்ணிக்கை குறித்தும், நாளை வனப்பகுதியிலும் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு ஏப்ரல் 16, 17ல் நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் கார்த்திக் தலைமையில் வனத்துறையினர் செய்துள்ளனர்.

