/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துவங்கியது கோடை விடுமுறை ரயில்களில் தேவை கூடுதல் பெட்டிகள்
/
துவங்கியது கோடை விடுமுறை ரயில்களில் தேவை கூடுதல் பெட்டிகள்
துவங்கியது கோடை விடுமுறை ரயில்களில் தேவை கூடுதல் பெட்டிகள்
துவங்கியது கோடை விடுமுறை ரயில்களில் தேவை கூடுதல் பெட்டிகள்
ADDED : ஏப் 25, 2024 02:40 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில், உட்பட பல்வேறு தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தற்போது தங்களது தொழில், கல்வி, வேலை வாய்ப்பு ரீதியாக கோவை, திருப்பூர், திருச்சி, ஈரோடு, சேலம், ஊட்டி, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் வசித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் தேர்வு விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு வருவர். மேலும் பலர் சுற்றுலாவும் செல்கின்றனர்.
செங்கோட்டையில் இருந்து மதுரை வரை இயங்கிய பாசஞ்சர் ரயில் 14 பெட்டிகள் இருந்த நிலையில், மயிலாடுதுறைக்கு தட நீட்டிப்பு செய்யப்பட்ட பிறகு 10 பெட்டிகளாக குறைக்கப்பட்டது.
இதே போல் மதுரையில் இருந்து கோவை, பாலக்காடு, ஈரோடு, விழுப்புரம், மயிலாடுதுறை, ராமேஸ்வரம், செங்கோட்டை, நாகர்கோவில் செல்லும் ரயில்களிலும் குறைந்த அளவு பெட்டிகளே உள்ளன.
இதில் ரயில்கள் புறப்படும் ஸ்டேஷனை கடந்து வழித்தடத்தில் உள்ள ஸ்டேஷன்களில் வரும் போது அப்பகுதி மக்கள் உட்கார இடம் இன்றி நின்று கொண்டும், கழிப்பறை அருகில் நின்று கொண்டும், படிகளில் உட்கார்ந்ததும் பயணிக்கின்றனர்.
எனவே, மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்களில் அனைத்து பாசஞ்சர் ரயில்களிலும் குறைந்த பட்சம் 15 பெட்டிகளும், காத்திருப்பு பட்டியல் அதிகம் உள்ளதால் எக்ஸ்பிரஸ்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கவும் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

