/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடியிருப்புகளுக்கு மத்தியில் ஓடையில் தேங்கிய கழிவு நீர்
/
குடியிருப்புகளுக்கு மத்தியில் ஓடையில் தேங்கிய கழிவு நீர்
குடியிருப்புகளுக்கு மத்தியில் ஓடையில் தேங்கிய கழிவு நீர்
குடியிருப்புகளுக்கு மத்தியில் ஓடையில் தேங்கிய கழிவு நீர்
ADDED : ஏப் 09, 2024 12:12 AM

சிவகாசி : சிவகாசி முஸ்லிம் ஓடைத் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள், முட்புதர்கள் ஆக்கிரமித்து உள்ளதால் கழிவுநீர் வெளியேற வழி இன்றி மக்கள் தொற்று நோயால் அவதிப்படுகின்றனர். எனவே ஓடையை துார்வார வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி முஸ்லிம் ஓடைத் தெருவில்குடியிருப்புகளுக்கு மத்தியில் ஓடை செல்கின்றது. ரயில்வே பீடர் ரோடு பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே உள்ள ஓடையில் இருந்து வெளியேறும் தண்ணீர் இந்த ஓடை வழியாக செல்லும்.
இந்நிலையில் ஓடை முழுவதுமே பிளாஸ்டிக் கழிவுகள், முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளது.இதனால் மழைநீர்,கழிவு நீர் வெளியேற வழி இல்லை. கொசு உற்பத்தியாகி குடியிருப்புவாசிகளை சிரமப்படுத்துகிறது.
மேலும் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறது. ஓடையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், முட்புதர்களை அகற்றி தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

