/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேராசிரியர் காலனியில் குடிநீருடன் கலக்கும் கழிவு நீர்
/
பேராசிரியர் காலனியில் குடிநீருடன் கலக்கும் கழிவு நீர்
பேராசிரியர் காலனியில் குடிநீருடன் கலக்கும் கழிவு நீர்
பேராசிரியர் காலனியில் குடிநீருடன் கலக்கும் கழிவு நீர்
ADDED : ஏப் 30, 2024 12:17 AM

விருதுநகர் : விருதுநகர் நகராட்சி 15 வார்டு பேராசிரியர் காலனியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றத்துடன் வருவதால் குடியிருப்போர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நகராட்சியின் 15 வார்டில் உள்ள பேராசிரியர் காலனி, பாலகுருகுலம் பகுதிகளில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்து துர்நாற்றத்துடன் வினியோகிக்கப்படுகிறது. இப்பகுதியில் அமைக்கப்பட்ட பாதாளச்சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு மேன்ஹோல் வழியாக கழிவு நீர் வெளியேறுவது தொடர்கதையாக உள்ளது.
பாதாளச்சாக்கடையில் மண் நிறைந்து மேன்ஹோல் வழியாக கழிவு நீர் வெளியேறி வருவதாகவும், மண்ணை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் கடந்த 6 மாதங்களாக இதே பிரச்னை நிலவி வருகிறது. மாவட்ட நிர்வாகம் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

