நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்லூரி தமிழ் துறை சார்பாக,'மொழிபெயர்ப்பு இலக்கியம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். தமிழ் துறை தலைவர் ஸ்டீபன் பொன்னையா வரவேற்றார். கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். சாகித்ய அகாடமி விருத்தாளர் தர்மன், மொழிபெயர்ப்பாளர் சத்தீஸ்வரன் பேசினர். பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை முதல்வர் உமாராணி, கணிதவியல் துறை தலைவர் நாகராஜன் வழங்கினர். விழாவில், பேராசிரியர்கள் ஜெயந்தி, வீரலட்சுமி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் வேலவன், சுகிர்தா, சுகன்யாதேவி, தனலட்சுமி செய்தனர். இணைபேராசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

