ADDED : மே 19, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் நகராட்சி ரோடுகளில் தேவையின்றி போடப்பட்டுள்ள வேகத்தடைகளால் விபத்து ஏற்பட்டு வருகின்றன.
மேலும் இவற்றில் வெள்ளை கோடுகள் பெயின்ட் கூட அடிக்காததால் இரவில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் தடையை பார்க்காமல் ஓட்டி விபத்தை சந்திக்கின்றனர்.
இதனால் படுகாயம் அடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. உழவர் சந்தை எதிரில் ஒரு வேகத்தடை உள்ளது. முச்சந்தி பகுதி என்பதால் அதிகளவில் வாகனங்கள் வருகின்றன.
உழவர் சந்தை எதிரில் வாகனங்கள் திரும்ப முயற்சிக்கும் இடத்தில் இந்த வேகத்தடை உள்ளது. இதில் எவ்வித வெள்ளை கோடுகளும் இல்லை.
எச்சரிக்கை எதுவும் இல்லாததால் கவனக்குறைவோடு வேகமாக யாரேனும் வந்தால் நிச்சயம் விபத்து தான். நகராட்சி ரோடுகளில் தேவையின்றி வைத்துள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும்.

