ADDED : மார் 24, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் நடிகை ராதிகா கணவர் சரத்குமாருடன் இன்று பிரசாரம் துவக்குகிறார்.
ச.ம.க.,வை கலைத்து பா.ஜ.,வில் சரத்குமார் இணைந்தார். இதையடுத்து அவரது மனைவி ராதிகாவிற்கு விருதுநகரில் போட்டியிட கட்சி வாய்ப்பளித்துள்ளது. இன்று முதல் அவர்கள் பிரசாரம் துவங்குகின்றனர்.
காலை 7:20 மணிக்கு விமானத்தில் மதுரை வரும் அவர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். தொடர்ந்து திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்துார், சிவகாசியில் பா.ஜ., அலுவலகங்களுக்கு செல்கின்றனர். கட்சி நிர்வாகிகள், தொகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கின்றனர்.

