/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் பங்குனிப்பொங்கல் வாகன போக்குவரத்து மாற்றம்
/
விருதுநகரில் பங்குனிப்பொங்கல் வாகன போக்குவரத்து மாற்றம்
விருதுநகரில் பங்குனிப்பொங்கல் வாகன போக்குவரத்து மாற்றம்
விருதுநகரில் பங்குனிப்பொங்கல் வாகன போக்குவரத்து மாற்றம்
ADDED : ஏப் 07, 2024 06:07 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா கூறியுள்ளதாவது: விருதுநகரில் பங்குனிப்பொங்கல் மற்றும் அக்னிசட்டி திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று ( ஏப்., 7 ) மாலை 4:00 மணி முதல் செவ்வாய் ( ஏப்., 9) காலை 8:00 மணி வரை வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஏ.டி.எஸ்.பி., தலைமையில் 420 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
மதுரையில் இருந்து விருதுநகர் வழியாக சிவகாசி, ராஜபாளையம், சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் பி.ஆர்.சி., டிப்போ வழியாக புல்லலக்கோட்டை சந்திப்பு, மீனாம்பிகை பங்களா, பர்மா காலனி, ஆத்துப்பாலம் வழியாக செல்ல வேண்டும்.
சிவகாசி, ராஜபாளையத்தில் இருந்து விருதுநகர் வழியாக மதுரை செல்லும் வாகனங்கள் ஆத்துப்பாலம், பர்மாகாலனி, மீனாம்பிகை பங்களா, புல்லலக்கோட்டை சந்திப்பு வழியாக நான்கு வழிச்சாலைக்கு செல்ல வேண்டும்.
திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துாரில் இருந்து விருதுநகர் வழியாக மதுரைக்கு செல்லும் வாகனங்கள் விருதுநகர் கணபதி மில் வழியாக கருமாதி மடம், ஆத்துப்பாலம், பர்மா காலனி, மீனாம்பிகை பங்களா, புல்லலக்கோட்டை வழியாக நான்குவழிச்சாலைக்கு செல்ல வேண்டும்.
அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகருக்கு வரும் வாகனங்கள் கருமாதிமடம் வழியாக ஆத்துப்பாலம், விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல வேண்டும். காரியாபட்டியில் இருந்து விருதுநகருக்கு வரும் வாகனங்கள் விருதுநகர் அரசு மருத்துவமனை வழியாக அல்லம்பட்டி, கருமாதி மடம், ஆத்துப்பாலம், விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

