/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மக்களால் தேடப்படுகிறவர் மாணிக்கம் தாகூர்
/
மக்களால் தேடப்படுகிறவர் மாணிக்கம் தாகூர்
ADDED : மார் 31, 2024 05:32 AM
அருப்புக்கோட்டை, : தி.மு.க. கூட்டணியில் காங்.,சார்பில் மாணிக்கம் தாகூர் வேட்பாளராக நிற்கிறார். இவர் தொகுதியில் மக்களால் தேடக் கூடிய நபராக உள்ளார், என அருப்புக்கோட்டையில் பா.ஜ., வேட்பாளர் ராதிகாவை ஆதரித்து வேலூர் இப்ராஹிம் பேசியதாவது:
கடவுளை கேவலப்படுத்துகிற, ஆன்மிக பூமியான தமிழகத்தை நிந்திக்கிறார்கள். இஸ்லாமியர்கள், இந்துக்கள் ஒன்று பட்டு, சமூக நல்லிணக்கத்தோடு தாமரைக்கு ஓட்டு போடுங்கள். இந்த முறை லோகசபா தேர்தலில் மும்முனை போட்டி ஏற்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்.,சார்பில் மாணிக்கம் தாகூர் வேட்பாளராக நிற்கிறார். இவர் தொகுதியில் மக்களால் தேடக் கூடிய நபராக உள்ளார்.
தொகுதியில் எந்தவிதமான பணிகளும் செய்யவில்லை. தேர்தல் வாக்குறுதியில் தொழிற்சாலை கொண்டு வருவேன் வேலைவாய்ப்புகள் உருவாக்குவேன் என கூறினார். அடுத்து, அ.தி.மு.க.,கூட்டணியில் தே.மு.தி.க சார்பாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நிற்கிறார். விஜயகாந்த் மண்ணில் இருக்கும் வரை 2 கட்சிகளை தீவிரமாக எதிர்த்தார்.
ஒன்று தி.மு.க., மற்றொன்று அ.தி.மு.க., அவர் எதிர்த்த அ.தி.மு.க., கூட்டணியில் அவருடைய கொள்கைக்கு எதிராக 5 சீட்டுக்கு கூட்டணி வைத்து, தே.மு.தி.க., மோசமான முடிவு எடுத்துள்ளது. விஜயகாந்தின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென்றால் அவருடைய ரசிகர்கள் பா.ஜ., விற்கு தான் ஓட்டு போட வேண்டும். குடும்ப அரசியல் செய்வதால் தி.மு.க.வை விஜயகாந்த் எதிர்த்தார்.
கரை படிந்த கரங்களாக இருப்பதால் அ.தி.மு.க. வையும் எதிர்த்தார். அவருடைய கொள்கையை மீறி, அவரது மகனை நிற்க வைத்து கட்சியை நாசம் செய்து விட்டனர். யார் பிரதமர் வேட்பாளர் என்பது தி.மு.க., விற்கு தெரியாது. அ.தி.மு.க., மற்றும் பிரேமலதா விடம் கேளுங்கள் அவர்களுக்கும் தெரியாது. பிரதமர் வேட்பாளர் இவர்தான் என்று சொல்லக்கூடிய தகுதி உள்ள ஒரே கட்சி பா.ஜ., தான். என்று பேசினார்.

