/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மண்ணை போட்டு நிரப்பி பயனில்லை மழை வந்தால் காணாமல் போகுது
/
மண்ணை போட்டு நிரப்பி பயனில்லை மழை வந்தால் காணாமல் போகுது
மண்ணை போட்டு நிரப்பி பயனில்லை மழை வந்தால் காணாமல் போகுது
மண்ணை போட்டு நிரப்பி பயனில்லை மழை வந்தால் காணாமல் போகுது
ADDED : ஏப் 22, 2024 06:33 AM

விருதுநகர் : விருதுநகரில் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு சேதமான ரோடு பகுதிகளில் தார் கொட்டி பேட்ஜ் பணி பார்க்காமல் மண்ணை போட்டு நிரப்புவதால் மழை வந்ததும் அவை கரைந்து ரோடு மீண்டும் பள்ளமாகிறது.
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டின் பக்கவாட்டு ரோடு புதிதாக போடப்பட்டுள்ளது. ஆனால் முன்புறம் உள்ள ரோடுகள் சரிவர போடப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பான புகார்கள் வரும் போது மண்ணை போட்டு பேட்ஜ் பணி செய்வர். அது சில காலம் தாங்கினாலும், மழை வந்தாலும் கரைந்து போய்விடும்.
ஒவ்வொரு மழையின் போதும் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டிலும் வெளியில் உள்ள முன்புற ரோட்டிலும் அதிகளவில் மழைநீர் தேங்கி அரை மணி நேரம் கழித்து தான் வடிகிறது. ஒவ்வொரு மழைக்கும் இது தான் நிலை. இவர்களின் மண் பேட்ஜ் ஒர்க்கால் ரோடு மேலும் மேலும் சேதமாகிறது.
பஸ்கள் வந்து பஸ் ஸ்டாண்டிற்குள் திரும்புவதாலும், டூவீலர்கள் அதிகப்படியாக இவ்வழியாக செல்வதாலும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மண்ணை போட்டு மட்டும் நிரப்புவதால் வெயிலில் காய்ந்த உடன் மண்ணில் சறுக்கி டூவீலர் ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர்.
முறைப்படி தார் கொண்டு பேட்ஜ் பணிகள் செய்ய வேண்டும். இப்பகுதியில் அதிகப்படியான மழைநீர் தேங்குவதையும் தடுக்க வேண்டும்.

