ADDED : மார் 28, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் இந்திய ஏரோநாட்டிக்கல் சொசைட்டி, இஸ்ரோ சார்பில் விண்வெளி பயன்பாடு செயற்கை நுண்ணறிவு பயிலரங்கம் நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், ஆராய்ச்சி துறை இயக்குனர் பள்ளிகொண்ட ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். டீன் சிவக்குமார் வரவேற்றார். துணைத் தலைவர் முத்துக்குமார் வாழ்த்தினார்.
ஐ.பி.ஆர்.சி. விஞ்ஞானிகள் காளிமுத்து, ரமேஷ், சந்திரசேகரன், பெங்களூர் யூ.ஆர்.எஸ்.சி. விஞ்ஞானி டாபினி மனோஜ், இஸ்ரோ விஞ்ஞானி கணேஷ் ஆகியோர் சந்திராயன் 3 திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு பற்றி பேசினர். பேராசிரியர் சார்லஸ் பிரவீன் பயிற்சி விளக்கம் அளித்தார். விஞ்ஞானி வேல்முருகன் நன்றி கூறினார்.

