/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இண்டியா கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்
/
இண்டியா கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஏப் 04, 2024 05:55 AM
சாத்துார், : சாத்துாரில் இண்டியா கூட்டணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமை வகித்து கூறியதாவது: மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது கடமையை சரியாக செய்யக் கூடியவர். சகோதரி ராதிகாவிற்கும், தம்பி விஜய பிரபாகரனுக்கும் நீங்கள் ஓட்டு போட்டால் அவர்களை பார்க்க சென்னைக்குத் தான் செல்ல வேண்டும் ஆனால் மாணிக்கம் தாகூர் விருதுநகரில் அலுவலகம் போட்டு தனது பணிகளை மேற்கொள்வார் அவரை எளிதாக நாம் சந்திக்கலாம் அவரால் யாருக்கும் எந்த தொந்தரவும் ஏற்படாது. அவரது பணியை அவர் செய்வார் நம்பணியை நாம் செய்ய வேண்டும், என்றார்.
ரகுராமன் எம்.எல்.ஏ., விருதுநகர் லோக்சபா வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

