/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
படந்தால் முத்துராமலிங்கபுரம் ஓடையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு
/
படந்தால் முத்துராமலிங்கபுரம் ஓடையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு
படந்தால் முத்துராமலிங்கபுரம் ஓடையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு
படந்தால் முத்துராமலிங்கபுரம் ஓடையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு
ADDED : மே 22, 2024 07:44 AM

சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றியம் படந்தால் முத்துராமலிங்கபுரத்தில் ஓடையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
படந்தால் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துராமலிங்கபுரத்தில் மழைநீர் செல்லும் ஓடை உள்ளது .இந்த ஓடையில் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கலந்து வருவதால் சாக்கடை ஓடையாக மாறிவிட்டது. இப்பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை கொண்டு வந்து ஓடையில் கொட்டுகின்றனர்.
பிளாஸ்டிக் கழிவுகளும், சானிடரி நாப்கின் போன்ற குப்பைகளும் கொட்டப்படுவதால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஓடையில் செல்லும் சாக்கடையை குப்பை அடைத்துக் கொள்வதால் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன. குப்பை கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றத்தால் இப் பகுதியில் வசிப்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஓடையை தூர்வாரி சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர். தற்போது கோடை மழை விட்டு விட்டு பெய்வதால் ஓடையில் செல்லும் மழை நீரும் கழிவு நீரும் கலந்து செல்லும் நிலையில் குப்பை கழிவுகளும் ஆங்காங்கே தேங்கி சுகாதாரத் கேடு ஏற்படுகிறது.
முத்துராமலிங்கபுரம் ஈஸ்வரன் கூறியதாவது: வீடுகளுக்கு குப்பை வாங்க ஆட்கள் வந்த போதும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வின்றி ஓடையில் குப்பையை கொட்டி வருகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளோடு சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட கழிவுகளையும் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. ஓடை அருகில் குடியிருப்பவர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறார்கள். ஒடையில் உள்ள குப்பையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமலட்சுமி ஊராட்சித் தலைவர்: ஓடையில் உள்ள குப்பை கழிவுகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

