தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வத்திராயிருப்பில் நண்பர்கள் தற்கொலை

வத்திராயிருப்பில் நண்பர்கள் தற்கொலை

வத்திராயிருப்பில் நண்பர்கள் தற்கொலை


ADDED : ஜூலை 10, 2024 02:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2024 02:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வத்திராயிருப்பு,:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் தனது நண்பர் தினேஷ் 26, தற்கொலை செய்து கொண்டதால் மன வேதனையடைந்த அவரது நண்பர் சந்தனம் 31, என்பவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வத்திராயிருப்பு முடுக்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ், குடிப்பழக்கத்திற்கு ஆளாகி திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

பின்னர் வயிற்று வலி ஏற்பட்ட நிலையிலும் தொடர்ந்து மது குடித்து வந்தார். பெற்றோர் அவரை கண்டித்தனர்.இதனால் நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு தனது வீட்டில் துாக்கிட்டு தினேஷ் தற்கொலை செய்து கொண்டார்.

அதே தெருவை சேர்ந்த தினேஷின் நண்பர் சந்தனம்,31, கூலித் தொழிலாளி. தினேஷ் தற்கொலை செய்த மன வருத்தத்தில் இருந்த அவர் அன்று இரவு 11:00 மணிக்கு வீட்டின் மாடியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

ஒரே தெருவை சேர்ந்த இருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us