/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
40 ஆண்டாகியும் துார்வாரவில்லை; விவசாயம் செய்து 15 ஆண்டுகளாச்சு
/
40 ஆண்டாகியும் துார்வாரவில்லை; விவசாயம் செய்து 15 ஆண்டுகளாச்சு
40 ஆண்டாகியும் துார்வாரவில்லை; விவசாயம் செய்து 15 ஆண்டுகளாச்சு
40 ஆண்டாகியும் துார்வாரவில்லை; விவசாயம் செய்து 15 ஆண்டுகளாச்சு
ADDED : மே 02, 2024 04:54 AM
காரியாபட்டி: காரியாபட்டி டி.கடமங்குளம் கண்மாய் தூர்வாரி 40 ஆண்டுகளுக்கு மேலானதால் தண்ணீர் இன்றி, 15 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் போனதையடுத்து விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
காரியாபட்டி டி. கடமங்குளத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான பெரிய கண்மாய் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வந்தது. பெரிய கண்மாயில் 3 மடைகள் உள்ளன.
கண்மாய் தூர்வாரி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகின. வரத்துக் கால்வாய் தூர்ந்து போயின. இந்த கண்மாய் நிரம்பி 15 ஆண்டுகள் ஆகின. கரைகள் மடைகள் சேதம் அடைந்தன.
சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. தண்ணீர் இன்றி போனதால் விவசாயம் செய்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
வயல்கள் அனைத்தும் தரிசுகளாகி சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து, நிலங்கள் பாழாகின. தூர்வார வேண்டி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ரோட்டிற்கு மண் எடுத்ததால் ஆங்காங்கே பள்ளங்களாக உள்ளன. தூர்வாரி கரைகளை சீரமைத்து, தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர்.
தோட்ட விவசாயமும் பாதிப்பு
மாயன், விவசாயி: கண்மாய் தூர்வாரி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கண்மாய் இருக்கும் இடமே தெரியாமல் போயின. கரைகள் சேதமாகின, தண்ணீர் வந்தாலும் தேக்க முடியாத நிலை உள்ளது.
மடைகள் முற்றிலும் சேதம் அடைந்து போனது. விவசாயம் செய்து 15 ஆண்டுகளுக்கு மேலாகின. கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தோட்ட விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. தூர்வாரி தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரத்துக் கால்வாய் சீரமைக்க வேண்டும்
சீனி, விவசாயி: கண்மாய்க்கு நீர் ஆதாரமாக தெற்காற்றிலிருந்து வரத்து கால்வாய் உள்ளது. கால்வாய் தூர்ந்து போனதால் தண்ணீர் வரத்து இல்லை. விவசாயம் இல்லாததால் கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பலமுறை கோரிக்கை விடுத்தும் தூர் வார நடவடிக்கை எடுக்கவில்லை. கண்மாயை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி சேதம் அடைந்த மடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

