/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாகன ஓட்டிகளை தடுமாறி விழச்செய்யும் தாதம்பட்டி ரோடு; தீர்வு காண்பது எப்போது

ADDED : மே 19, 2024 11:37 PM

விருதுநகர் : விருதுநகர் சூலக்கரை மேட்டில் இருந்து தாதம்பட்டி செல்லும் ரோடு உயர்ந்து இருப்பதாலும், அதன் பக்கவாட்டு பகுதிகள் தாழ்வாக இருப்பதாலும் வாகன ஓட்டிகள் தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.
விருதுநகர் சூலக்கரை மேட்டில் இருந்து தாதம்பட்டி செல்லும் ரோடு பிரதான ரோடாக உள்ளது. அருகில் கலெக்டர் அலுவலகம் உள்ளதால் இந்த ரோட்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இங்கு குடியிருப்புகளும் வளர்ந்து புறநகர் பகுதி போல் மாறி விட்டதால் ரோட்டில் வாகனங்கள் அடிக்கடி செல்கின்றன.
இந்நிலையில் இந்த ரோடு ஒரு காலத்தில் தாழ்வாக சமதளத்தில் இருந்தது. ரோட்டின் மேலே ரோடு போட்டு போட்டு தற்போது ரோடு மட்டும் உயர்ந்துள்ளது. அப்பகுதி குடியிருப்பு அனைத்தும் தாழ்ந்து பள்ளத்தில் உள்ளன. மேலும் இப்பகுதியின் நில அமைப்பும் பள்ளமாக இருக்கிறது.
ரோடு அதிகம் உயர்ந்துவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கவனம் தப்பினால் வளைவில் திரும்ப முடியாமல் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகமாவதால் விபத்தும் அதிகம் ஏற்படுகிறது. உள்ளூர் மக்களை காட்டிலும், வெளியூர் மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.