/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலை தொழிலாளர்களிடம் கலந்துரையாடி ஓட்டு சேகரிக்கும் பா.ஜ., வேட்பாளர் ராதிகா

ADDED : ஏப் 03, 2024 07:07 AM
சிவகாசி : விருதுநகர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சிவகாசி பகுதியில் பா.ஜ.., வேட்பாளர் ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாக சென்று தொழிலாளர்களிடம் கலந்துரையாடி ஆதரவு கேட்டு வருகிறார்.
விருதுநகர் லோக்சபா தொகுதியில் தேர்தலையொட்டி பிரசாரம் களைகட்டி வருகின்றது. பொதுவாக வேட்பாளர்கள் முக்கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கேட்பர்.
ஆனால் பா.ஜ., வேட்பாளர் ராதிகா தனது கணவர் சரத்குமார் உடன் தினமும் காலையில் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாக சென்று தொழிலாளர்களிடம் கலந்துரையாடி ஓட்டு சேகரிக்கின்றார்.
இதுவரையில் சிவகாசி பகுதியில் பிரசாரத்தை துவக்காத நிலையில், தொழிலாளர்களிடம் ஆதரவு கேட்பதற்காக கட்சியினரை அழைத்துச் செல்வதில்லை. எந்த ஆரவாரமும் இன்றி பட்டாசு ஆலைக்குச் சென்று தொழிலாளர்களிடம் கலந்துரையாடுகிறார்.
அவர்களின் பிரச்னைகளை கேட்டு அறிந்து தீர்த்து வைப்பதாக உறுதி அளிக்கிறார்.
தொழிலாளர்களுக்கு மரியாதை கொடுத்து நேரடியாக சென்று பேசுவதால் அவர்களிடம் ராதிகாவிற்கு செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் மத்தியில் ராதிகாவிற்கு மவுசு அதிகரித்துள்ளது.