/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
/
பட்டாசு தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
ADDED : செப் 18, 2024 04:11 AM
சிவகாசி சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி மின்னணு, தொடர்பியல் துறை சார்பில் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை நிதி உதவியுடன் தொழில்துறை பாதுகாப்பு ,சுகாதார பயிற்சி மையம் சார்பில் பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். டீன் மாரிசாமி வாழ்த்தினார். மின்னணுவியல் துறை தலைவர் வளர்மதி வரவேற்றார். தொழில்துறை பாதுகாப்பு , சுகாதார பயிற்சி மையம் இணை இயக்குனர் ராமமூர்த்தி பேசியதாவது, பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணிய வேண்டும். தகுந்த பயிற்சி பெற்று பாதுகாப்பான முறையில் வேலை செய்ய வேண்டும். தீ மற்றும் மின்சார பாதுகாப்பு தொடர்பான அனைத்து கருவிகளும் சரியாக பராமரிக்கப்பட வேண்டும், என்றார். மாவட்டத்திலிருந்து 100 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம் மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் ரஞ்சித்குமார், வினோத் செய்தனர்.

