/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்குவாரி கிடங்கில் வெடி விபத்து மூன்று பேர் உடல் சிதறி பரிதாப பலி
/
கல்குவாரி கிடங்கில் வெடி விபத்து மூன்று பேர் உடல் சிதறி பரிதாப பலி
கல்குவாரி கிடங்கில் வெடி விபத்து மூன்று பேர் உடல் சிதறி பரிதாப பலி
கல்குவாரி கிடங்கில் வெடி விபத்து மூன்று பேர் உடல் சிதறி பரிதாப பலி
ADDED : மே 01, 2024 09:49 PM

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூர்- கீழஉப்பிலிக்குண்டு அருகே, ஆவியூரைச் சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் சேதுவுக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது.
குவாரியின் ஒரு பகுதியில் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ராஜ்குமாருக்கு சொந்தமான வெடி மருந்து கிடங்கு உள்ளது.
இங்கிருந்து மற்ற குவாரிகளுக்கு வெடி மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
நேற்று காலை 8:30 மணிக்கு, 2 மினி வேனில் 3 தொழிலாளர்கள் வெடி மருந்து பொருட்களை ஏற்றினர். அப்போது வெடிபொருட்கள் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. 10 கி.மீ.,க்கு அதிர்வு இருந்தது.
வெடி மருந்துகளை ஏற்றிய மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் கந்தசாமி, 47, தென்காசி மாவட்டம் வடமலாபுரத்தைச் சேர்ந்த பெரியதுரை, 25, சிவகிரி தாலுகா அருகன்குளம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி, 60, என்பவரின் உடல்கள், 1 கி.மீ.,க்கு துாக்கி வீசப்பட்டு, சிதறிக் கிடந்தன. 2 மினி வேன்களும் உருக்குலைந்தன.
40க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. பிரிட்ஜ் கதவுகள், ஆஸ்பெஸ்டாஸ் சீட்கள் உடைந்தன.
இதையடுத்து டி.கடமங்குளம், டி.புதுப்பட்டி மக்கள் குவாரி, வெடி மருந்து கிடங்கை நிரந்தரமாக மூட வேண்டி மதுரை - துாத்துக்குடி நான்குவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தலைமையிலான போலீசார், பேச்சு நடத்தி சமரசம் செய்தனர். 2 மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீரானது.
இந்த பயங்கர விபத்து குறித்து, மதுரை வெடிபொருள் நிபுணர் குழுவினர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
கல்குவாரி உரிமையாளர் சேதுவை போலீசார் கைது செய்தனர். வெடிபொருள் கிடங்கு உரிமையாளர் ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

