sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒதுக்கீடு

/

தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒதுக்கீடு

தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒதுக்கீடு

தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒதுக்கீடு


ADDED : ஏப் 03, 2024 07:03 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில்மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்டமாக இணைய வழி கணினி மூலம் சீரற்ற முறையில் சட்டசபை தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

தேர்தல் பொதுப்பார்வையாளர் நீலம் நம்தேவ் எக்கா தலைமை வகித்தார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.

7 சட்டசபை தொகுதியில் மொத்தம் 1895 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஒட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடக்கூடிய தலைமை அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நிலை-1, நிலை -2, நிலை -3,1200க்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள ஓட்டுச் சாவடிக்கு அலுவலர் நிலை-4 என மொத்தம் 9243 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ராஜபாளையம் சட்டசபை தொகுதியில் 262 ஓட்டுச்சாவடி மையங்களில் 1281 அலுவலர்களும், ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் 283 ஓட்டுச்சாவடி மையங்களில் 1391 அலுவலர்களும், சாத்துாரில் 286 ஓட்டுச்சாவடி மையங்களில் 1380 அலுவலர்களும், சிவகாசியில் 277 மையங்களில் 1350 அலுவலர்களும், விருதுநகரில் 256 மையங்களில் 1262 அலுவலர்களும், அருப்புக்கோட்டையில் 255 மையங்களில் 1243 அலுவலர்களும், திருச்சுழியில் 276 மையங்களில் 1336 அலுவலர்களும் என மொத்தம் 7 சட்டசபை தொகுதிகளில் 1895 ஓட்டுச்சாவடி மையங்களில் 9243 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நாச்சியார் அம்மாள், பிர்தவுஸ் பாத்திமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us