/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அ.தி.மு.க.,வால் குரல் எழுப்ப முடியாது விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் ராதிகா பிரசாரம்

ADDED : ஏப் 16, 2024 03:34 AM
திருமங்கலம்: திருமங்கலம் கள்ளிக்குடி பகுதிகளில் விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் ராதிகா ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவர் பேசியதாவது: அ.தி.மு.க., மத்தியில் யாருடனும் கூட்டணியில் இல்லை. மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ளனர். ஆகையால் அவர்களால் எந்த நன்மையும் மக்களுக்கு செய்ய முடியாது. இவர்கள் எங்கே போய் பார்லிமென்ட்டில் குரல் கொடுப்பது. அவரவர் வீட்டில் தான் குரல் கொடுக்க முடியும். மக்களுக்கு ஒரு டீ கூட வாங்கித் தர முடியாது.
காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றால் திட்டங்களை தருவதாக கூறி மக்களிடம் அட்டைகளை கொடுத்தது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்து உள்ளோம்.
நான் வெற்றி பெற்றால் மோடி அரசிடம் நேரடியாக உங்களுக்கான நலத்திட்டங்களை கேட்டு பெற்றுத் தருவேன். உங்களுக்கு ஒரு பாலமாக இருப்பேன் என்றார்.