/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதலான டிக்கெட் கவுண்டர்கள் திறக்க எதிர்பார்ப்பு
/
சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதலான டிக்கெட் கவுண்டர்கள் திறக்க எதிர்பார்ப்பு
சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதலான டிக்கெட் கவுண்டர்கள் திறக்க எதிர்பார்ப்பு
சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதலான டிக்கெட் கவுண்டர்கள் திறக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 21, 2024 03:43 AM
சாத்துார்: சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதலான ரிசர்வேஷன் டிக்கெட் கவுண்டர்களை திறக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
லோக்சபா பொதுத்தேர்தலை தொடர்ந்து சென்னை, கோயம்புத்தூர், திருச்சி , சேலம், திருப்பூர், கேரளா, உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் சாத்தூர் சுற்று கிராமங்களில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு ஓட்டு போட வந்தனர்.
ஓட்டுப்பதிவு செய்துவிட்டு இவர்கள் மீண்டும் ஊருக்கு செல்வதற்காக சாத்துார் ரயில்வே நிலையத்திற்கு சென்று டிக்கெட் ரிசர்வேஷன் செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை முதலே ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் ஸ்டேஷனில் ஒரே ஒரு டிக்கெட் கவுண்டர் மூலம் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது கூடுதலாக இரண்டு கவுண்டர்கள் உள்ளன.
தேவையான பணியாளர்களும் உள்ள நிலையில் கூட்ட நெரிசலை உணர்ந்து கூடுதல் கவுண்டர்களை திறக்காமல் ஒரே டிக்கெட்கவுண்டர் மூலம் டிக்கெட் ரிசர்வேஷன் மற்றும் பொதுப் பெட்டிக்கான டிக்கெட் வழங்கப்படுவதால் பயணிகள் வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களில் அதிக அளவில் வட மாநில தொழிலாளர்கள் அட்டை கம்பெனி, மில்கள், ஹோட்டல்கள் லாட்ஜிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வெளியூருக்கு செல்வதற்கும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதன் காரணமாக சாத்துார் ரயில்வேஸ்டேஷனில் அதிகாலை முதல் இரவு வரை டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதால் மனச்சோர்வுக்கு பயணிகள் ஆளாகின்றனர். எனவே தெற்கு மண்டல ரயில்வே நிர்வாகம் சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்களை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

