/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குப்பை கிடங்காகும் நீர்வரத்து ஓடை
/
குப்பை கிடங்காகும் நீர்வரத்து ஓடை
ADDED : ஏப் 22, 2024 07:05 AM

விருதுநகர், : விருதுநகர் அருகே நடுவப்பட்டியில் நீர்வரத்து ஓடையில் குப்பை கொட்டப்படுவதால் பாதிப்பு சூழல் ஏற்பட்டுள்ளது. இதை ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.
விருதுநகர் அருகே நடுவப்பட்டியில் பிரதான நீர்வரத்து ஓடை செல்கிறது.
சிறிய மழை பெய்தாலும் இந்த நீர்வரத்து ஓடை நிறைந்து அப்பகுதியில் இதமான சூழலை உருவாக்குகிறது.
அடுத்தடுத்து விளைநிலங்களுக்கு செல்லும் இந்த ஓடை சில ஆண்டுகளுக்கு முன் துார்வாரி ஆழப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது குப்பை கொட்டுமிடமாக மாறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
வெறுமனே பெய்த மழைநீரில் குவிந்து வரும் குப்பையால் நீர் மாசுபடுகிறது. இது அப்பகுதி மக்களை முகம் சுளிக்க செய்கிறது.
ஊராட்சி நிர்வாகம் அப்பகுதிகளில் முறைப்படி குப்பை அகற்ற வேண்டும். தேவையான முன்னேற்பாடுகளை செய்தால் மட்டுமே அந்த நீர்வரத்து ஓடை பாதுகாக்கப்படும்.

