/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்காணிப்பு இல்லாததால் காற்றில் மிதக்க விடப்படும் சிவப்பு எச்சரிக்கை
/
கண்காணிப்பு இல்லாததால் காற்றில் மிதக்க விடப்படும் சிவப்பு எச்சரிக்கை
கண்காணிப்பு இல்லாததால் காற்றில் மிதக்க விடப்படும் சிவப்பு எச்சரிக்கை
கண்காணிப்பு இல்லாததால் காற்றில் மிதக்க விடப்படும் சிவப்பு எச்சரிக்கை
ADDED : மே 22, 2024 07:36 AM

விருதுநகர் : மாவட்டத்தில் கண்காணிப்பு போதாததால் நீளமான சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்களில் சிவப்பு எச்சரிக்கையை பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு காண்பிப்பது குறைந்து வருகிறது.
போக்குவரத்து விதிமீறல் என்றுமே பெரும் பிரச்னையாக உள்ளது. ஹெல்மெட் அணிவது, மூன்று பேர் வாகனத்தில் ஏற்றி செல்வது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது போன்றவை தான் பெரும் குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் நெரிசல் நேரங்களில் கனரக வாகனங்கள் நகர்ப்பகுதிக்குள் நுழைவதோ, அதிக பாரம் ஏற்றி செல்வதோ கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.
மாவட்டத்தில் பல்வேறு தொழில் பயன்பாட்டிற்கு சரக்குகளை கொண்டு செல்லும் வாகனங்கள் அதிகளவில் இயங்குகின்றன. வாகனத்தில் குறிப்பிட்டுள்ள நீளத்தை தாண்டி கூடுதல் நீளத்திற்கு பொருள் ஏற்றினால் சிவப்பு எச்சரிக்கை காட்டப்பட வேண்டும். வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் அந்த பொருளின் மீது சிவப்பு துணியோ, சிவப்பு பலகையோ பொருத்தப்பட வேண்டும்.
இதன் மூலம் அந்த வாகனத்தின் பின்னால் வருவோர் கவனமாக வருவதுடன் சிவப்பு எச்சரிக்கையால் விபத்துக்களும் குறையும். ஆனால் தற்போது பல இடங்களில் இவ்வாறு செய்யப்படுவதில்லை. இதனால் பின்னால் வந்து மோதும் விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மின்வாரியத்தில் இருந்து மின்கம்பங்களை ஏற்றி செல்லும் லாரியில் கூட இது போன்ற விதிகளை பின்பற்றுவதில்லை. ஆகவே போலீஸ் நிர்வாகம் இது தொடர்பான கடும் நடவடிக்கை எடுத்து இது போன்ற செயல்பாடுகளை குறைக்க வேண்டும்.

