/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறந்தவெளி கழிப்பிடமாகும் வணிக வளாகம்
/
திறந்தவெளி கழிப்பிடமாகும் வணிக வளாகம்
ADDED : ஏப் 14, 2024 03:56 AM

காரியாபட்டி: பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வணிக வளாகத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவது, ஒன்றிய அலுவலக ரோட்டில் ஆக்கிரமிப்பால் ஆட்கள் கூட நடந்து செல்ல சிரமம், ரோட்டோரத்தில் ஏ.டி.எம்., கட்ட முயற்சி மேற்கொண்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காரியாபட்டி பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
காரியாபட்டி பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் அருகே வணிக வளாகம் உள்ளது. பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவது தான். துர்நாற்றத்தால் மற்ற கடைக்காரர்கள் பெரிதும் பதிக்கப்படுகின்றனர். அப்பகுதியை கடந்து செல்பவர்கள் முகம் சுளித்து செல்ல வேண்டி இருக்கிறது. ஒன்றிய அலுவலக ரோட்டில் டூவீலர்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மறுபக்கம் டூவீலர்களை நிறுத்தி இடையூறு செய்வதால் ஆட்கள் நடந்து செல்லவே பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.
முக்கு ரோட்டில் பஸ் ஸ்டாப் அருகே தனியார் நிறுவன ஏ.டி.எம்., அமைக்க மேடை அமைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

