/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
1628 ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரம்
/
1628 ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரம்
1628 ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரம்
1628 ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரம்
ADDED : ஏப் 02, 2024 06:40 AM

விருதுநகர் : விருதுநகர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, இணைய வழியில் சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் பணி தேர்தல் பொதுப்பார்வையாளர் நீலம் நம்தேவ் எக்கா தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது.
ஏப். 19ல் தேர்தல் நடக்கிறது. 27 பேர் இறுதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் விருதுநகர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை இணைய வழியில் சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் பணி நடந்தது. அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
விருதுநகர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சாத்துார், சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருச்சுழி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு இணைய வழியில் சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1628 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சாத்துார் சட்டசபை தொகுதிக்கு 346 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சிவகாசி சட்டசபை தொகுதிக்கு 333, அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதிக்கு 308, விருதுநகருக்கு 308, திருச்சுழிக்கு 333 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் என மொத்தம் 1628 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.

