நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நுாலகத்தின் 150வது ஆண்டு விழாவில் சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டிமன்றம் நடந்தது.
இதில் சமுதாய மாற்றத்தை சாதிக்கும் ஆற்றல் எழுத்துக்கே என்ற அணியில் பேச்சாளர்கள் ராஜ்குமார், கவிதா ஜவகர், ரேவதி வாதிட்டனர். பேச்சுக்கே என்ற அணியில் பேராசிரியர் ராஜாராம், ராஜா, வழக்கறிஞர் ஜான்சி வாதிட்டனர். முடிவில் சாலமன் பாப்பையா நடுவராக செயல்பட்டார்.
நிகழ்ச்சியில் துணைத் தலைவர் முத்துப்பட்டர், நூலக நிர்வாகிகள் ராதா சங்கர், ஜெயக்குமார், சிவக்குமார், ராஜாராம், புலவர் பாலகிருஷ்ணன், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

