/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காந்தி நகர் ரயில்வே மேம்பாலத்தில் கீழ் பகுதியில் ரோடு அமைக்க எதிர்பார்ப்பு
/
காந்தி நகர் ரயில்வே மேம்பாலத்தில் கீழ் பகுதியில் ரோடு அமைக்க எதிர்பார்ப்பு
காந்தி நகர் ரயில்வே மேம்பாலத்தில் கீழ் பகுதியில் ரோடு அமைக்க எதிர்பார்ப்பு
காந்தி நகர் ரயில்வே மேம்பாலத்தில் கீழ் பகுதியில் ரோடு அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 17, 2024 04:17 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை காந்தி நகர் ரயில்வே மேம்பாலத்தில் கீழ் பகுதியில் ரோடு அமைக்க 10 கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை - தூத்துக்குடி நான்கு வழி ரோடு அருப்புக்கோட்டை வழியாக செல்கிறது. இங்குள்ள காந்தி நகர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் ரோடு உள்ளது. இந்த ரோடு வழியாக தொட்டியாங்குளம், குறிஞ்சாக்குளம், பொய்யான்குளம், இலங்கிப்பட்டி, புலியூரான், புலிக்குறிச்சி, பிள்ளையார் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாலத்தை கடந்து எஸ்.பி.கே., கல்லூரி ரோடு வழியாக நகருக்குள் தங்கள் விவசாய பொருட்களான காய்கறிகள், பால் போன்றவைகளை கொண்டு செல்வர்.
முன்பு, பாலம் இல்லாத போது இப்பகுதி மக்களுக்கு வசதியாக இருந்தது. தினமும் 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்லும். இந்த பாதையை விட்டால் 2 கி.மீ., தூரம் சுற்றி நகருக்குள் செல்ல வேண்டும். ரயில்வே மேம்பாலம் வந்த பிறகு பாலத்தின் கீழ்பகுதி குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ளது. ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் பாலத்தின் கீழ்பகுதியும், தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் பாலத்தின் இருபுறமும் உள்ள சர்வீஸ் ரோடு உள்ளது. இரு துறைகளும் ஒருங்கிணைந்து பாலத்தின் கீழ் பகுதியில் 10 கிராம மக்களின் நலன் கருதி ரோடு அமைத்தால் சிரமமின்றி வந்து செல்ல வசதியாக இருக்கும்.

