/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
----மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
/
----மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
ADDED : ஏப் 15, 2024 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்,- ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.
விழாவை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. கொடி மரத்துக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகமும் அதனை தொடர்ந்து கொடி ஏற்றி மகா தீபாராதனை காட்டப்பட்டது.
விழா காலங்களில் அம்மன் தினமும் பொட்டி பல்லாக்கு, கண்ணாடி சப்பரம், பூத, தண்டியல் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா ஏப். 23ல் நடைபெறுகிறது.

