/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் சுயஉதவி குழுவினர் கலெக்டரிடம் புகார் மனு
/
மகளிர் சுயஉதவி குழுவினர் கலெக்டரிடம் புகார் மனு
ADDED : நவ 23, 2024 06:11 AM

விழுப்புரம் : விக்கிரவாண்டி அருகே மகளிர் சுயஉதவிக் குழுவினர், தங்களின் வங்கி கடன் தொகையில் முறைகேடு நடப்பதாக புகார் மனு அளித்தனர்.
விக்கிரவாண்டி தாலுகா, முட்ராம்பட்டு செந்தமிழ், முத்துலட்சுமி ரெட்டி, இளந்தென்றல், செம்பருத்தி, ராகவேந்திரா மற்றும் அன்னை தெராசா மகளிர் குழுவினர், நேற்று விழுப்புரம் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
மனு விபரம்:
முட்ராம்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் செந்தமிழ் மகளிர் குழுவில், தமிழக அரசின் புதுவாழ்வு திட்டம் மூலம் 10 லட்சம் ரூபாய் கடன் பெற்று, முறையாக திருப்பி செலுத்தி வருகிறோம்.
தற்போது வரை 7 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளோம். ஆனால், அந்த தொகையை, புதுவாழ்வு திட்ட ஊக்குனர், சரியாக வங்கியில் செலுத்துகிறாரா என தெரியவில்லை. இதுபோல் 6 மகளிர் குழுவினர்களும், திருப்பி செலுத்தும் பணம் அனைத்தும் முறையாக வங்கியில் செலுத்துப்படுகிறதா?, ஏமாற்றப்படுகிறதா என தெரியவில்லை. இது குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

