ADDED : செப் 11, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அருகே ஓட்டலில் வேலை செய்த பெண் மின்சாரம் தாக்கி பலியானார்.
விழுப்புரம் மாவட்டம், தேவதானம்பேட்டை ஊராட்சியை சேர்ந்த குமார் மனைவி சுதா, 37; இவர், கெங்கவரம் தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி சுதா சுயநினைவை இழந்தார்.
செஞ்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுதா, சிகிச்சை பலனின்றி இறந்தார். கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.