ADDED : செப் 13, 2025 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வயிற்று வலியால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 35; இவரது மனைவி மஞ்சு, 33; இருவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். மஞ்சு அடிக்கடி ஏற்படும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த 9ம் தேதி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டவர் மனமுடைந்து, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடன், சென்னை, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை மஞ்சு இறந்தார்.
விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.