/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் விதி மீறி போராட்டம் மா.கம்யூ., நிர்வாகிகள் மீது வழக்கு
/
தேர்தல் விதி மீறி போராட்டம் மா.கம்யூ., நிர்வாகிகள் மீது வழக்கு
தேர்தல் விதி மீறி போராட்டம் மா.கம்யூ., நிர்வாகிகள் மீது வழக்கு
தேர்தல் விதி மீறி போராட்டம் மா.கம்யூ., நிர்வாகிகள் மீது வழக்கு
ADDED : மார் 21, 2024 12:12 AM
வானூர்: தேர்தல் விதிமுறகைளை மீறி, காத்திருப்பு போராட்டம் நடத்திய மா.கம்யூ., நிர்வாகிகள் 52 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வானுார் அடுத்த எடச்சேரி கிராம சர்வே எண்ணில், தற்போது வழங்கப்பட்டுள்ள பட்டா எண்ணை ரத்து செய்து, உண்மையாக பயிர் செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். ஆவணங்களை முறைகேடாக தயாரித்து பத்திர பதிவுக்கு துணை போகும் தாசில்தார், வி.ஏ.ஓ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம், மா.கம்யூ.., வானுார் வட்டக்குழு சார்பில், வானுார் தாலுகா அலுவலகம் எதிரில் வட்ட செயலாளர் முருகன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால், போராட்டம் நடத்தக்கூடாது என வானுார் போலீசார் எச்சரித்தனர். அதை மீறியும், அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்ட 27 பெண்கள் உட்பட 52 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் மீது, தேர்தல் விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியதாக வழக்குப் பதிந்துள்ளனர்.

