/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அருகே கார் - லாரி மோதல் இரு ஆசிரியர்கள் பலி; 6 பேர் படுகாயம்
/
விழுப்புரம் அருகே கார் - லாரி மோதல் இரு ஆசிரியர்கள் பலி; 6 பேர் படுகாயம்
விழுப்புரம் அருகே கார் - லாரி மோதல் இரு ஆசிரியர்கள் பலி; 6 பேர் படுகாயம்
விழுப்புரம் அருகே கார் - லாரி மோதல் இரு ஆசிரியர்கள் பலி; 6 பேர் படுகாயம்
UPDATED : செப் 21, 2025 06:23 AM
ADDED : செப் 21, 2025 01:51 AM

விழுப்புரம்:விழுப்புரம் அருகே கார் - லாரி மோதிய விபத்தில் இரு ஆசிரியர்கள் உடல் நசுங்கி இறந்தனர்; 6 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம், தனலட்சுமி கார்டன், மூவேந்தர் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன் மனைவி சிவரஞ்சனி, 38; திருச்சி, பாலகரையை சேர்ந்த சாகுல் அமீது மனைவி நெகர்நிஷா, 47.
கடலுார் மாவட்டம், நல்லாத்துரை சேர்ந்த எல்லப்பன் மனைவி கவுசல்யா, 23. மூவரும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு, விழுப்புரம் அருகே காரணை பெரிச்சானுார் அரசு பள்ளியில் 10 நாட்களுக்கு முன் பணியில் சேர்ந்தனர்.
சென்னையில் நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க சிவரஞ்சனி, நெகர்நிஷா, கவுசல்யா மற்றும் ராம்பாக்கம் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரான கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வாணியந்தலை சேர்ந்த பூவிழி, 35, ஆகிய நான்கு பேரும் ஒன் றாக செல்ல முடிவு செய்தனர்.
நேற்று அதிகாலை, 4:30 மணியளவில், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வாடகை காரில் சென்னை சென்றனர். அவர்களுடன் நெகர்நிஷா கணவரும், தனியார் பள்ளி ஆசிரியருமான சாகுல் அமீது, 52, கவுசல்யா கணவர் எல்லப்பன், 39, பூவிழி கணவர் முருகன், 38, ஆகியோரும் சென்றனர்.
கடலுார் மாவட்டம் பண்டசோழநல்லுாரை சேர்ந்த சூர்யா, 27, காரை ஒட்டினார். விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் என்ற இடத்தில் காலை, 5:00 மணியளவில் கார் சென்றபோது, அங்கு மேம்பால பணிகள் நடப்பதால் காரை எதிர் திசையில் டிரைவர் இயக்கினார்.
அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சிமென்ட் மூலப்பொருட்களை ஏற்றி வந்த லாரி, கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியது. சிவரஞ்சனி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
படுகாயமடைந்த 6 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சாகுல் அமீது இறந்தார் . விபத்தால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா, 3 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தோருக்கு 1 லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.