/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பட்டாவும் வீடு கட்ட உத்தரவும் இருக்கு ஆனா இடம் மட்டும் இல்லை பழங்குடியினர் தாசில்தாரிடம் மனு

ADDED : மே 03, 2025 10:32 PM

செஞ்சி: கோணை ஊராட்சியில் அரசு வழங்கிய வீட்டு மனைப்பட்டா இடத்தை அளந்து விட வேண்டும் என பழங்குடியினர் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
செஞ்சி அடுத்த கோணை ஊராட்சியைச் சேர்ந்த 23 பழங்குடியினருக்கு ஜன்மன் திட்டத்தில் தலா 5.07 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டுவதற்கான அரசு உத்தரவு வழங்கியுள்ளனர்.
ஆனால், இவர்களுக்கு அரசு வழங்கிய வீட்டுமனைப் பட்டாவிற்கான இடத்தை வருவாய்த் துறையினர் இதுவரை அளந்து ஒப்படைக்கவில்லை.
இதனால் வீடு கட்டுவதற்கான உத்தரவு இருந்தும் பழங்குடியினர் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று பாதிக்கப்பட்டவர்கள் ஊராட்சி தலைவர் பிருந்தா தலைமையில் செஞ்சி தாசில்தார் செல்வகுமாரை சந்தித்து இடத்தை அளந்து தங்களிடம் ஒப்படைக்குமாறு மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அத்தியூர்
இதே போல் அத்தியூர் ஊராட்சியில் 15 பழங்குடியினர்களுக்கு வீடு கட்டுவதற்காக வழங்கிய இடத்தை வேறு இடத்தில் மாற்றி தர வேண்டும் என கேட்டு தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவித்திருந்தனர்.
அதன்படி போராட்டம் நடத்த வந்தவர்களிடம் தாசில்தார் செல்வகுமார் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.