/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருவேங்கடமுடையான் பஜனை கோவில் மகா சம்ப்ரோஷணம்
/
திருவேங்கடமுடையான் பஜனை கோவில் மகா சம்ப்ரோஷணம்
ADDED : பிப் 21, 2024 08:14 AM

செஞ்சி : நல்லாண்பிள்ளைபெற்றாள் திருவேங்கடமுடையான் புது பஜனைக் கோவில் மகா சம்ப்ரோஷண விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 18ம் தேதி காலை 9:00 மணிக்கு வாஸ்து பூஜை, கலச பிரதிஷ்டை நடந்தது. அன்று மாலை 4:00 மணிக்கு பகவத் பிரார்த்தனை, மகா தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு தேஜஸ்வி பட்டாச்சாரியார் தலைமையில் கிருஷ்ணகான பஜனை நடந்தது.
நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு கோ பூஜையும், பிரதான கலச பூஜையும் நடந்தது.
திண்டிவனம் நம்மாழ்வார் சபை தலைவர் வெங்கடேசன் பாகவதர் தலைமையில் திவ்ய பிரபந்த பஜனை நடந்தது.
காலை 10:00 மணிக்கு மூலவர் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபாலருக்கும், கோபுர கலசங்களுக்கும் கலச புனித நீர் ஊற்றி மகா சம்ப்ரோஷணம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இரவு 8:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடமுடையான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.

