/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் வந்தால் கரிசனமும் வந்து விடும் 'குவிஸ் மாஸ்டராக' மாறிய அமைச்சர்
/
தேர்தல் வந்தால் கரிசனமும் வந்து விடும் 'குவிஸ் மாஸ்டராக' மாறிய அமைச்சர்
தேர்தல் வந்தால் கரிசனமும் வந்து விடும் 'குவிஸ் மாஸ்டராக' மாறிய அமைச்சர்
தேர்தல் வந்தால் கரிசனமும் வந்து விடும் 'குவிஸ் மாஸ்டராக' மாறிய அமைச்சர்
ADDED : மார் 16, 2024 05:37 AM

திண்டிவனம்,: திண்டிவனம் அருகே, கீழ் அதனுார் கிராமத்தில் நடந்த அங்கன்வாடி மையம் திறப்பு விழாவில், மாணவர்களிடம் ஆசிரியர்கள் கேள்வி கேட்பதுபோல், பெண்கள் மற்றும் சிறுவர்களிடம் அமைச்சர் மஸ்தான் கேள்வி எழுப்பினார்.
விழாவில் பேசிய அமைச்சர் மஸ்தான், பள்ளி மாணவர்களிடம், 'இங்குள்ள பள்ளியில் காலையில் சிற்றுண்டி சாப்பிடுவர்கள் மட்டும் கையை துாக்குங்கள்' என கேட்டார். மாணவர்கள் சிலர் கையை துாக்கினர்.
'காலை சிற்றுண்டி வழங்குவதற்கு யார் உத்தரவிட்டது?' என அமைச்சர் கேள்வி எழுப்ப, 'முதல்வர் ஸ்டாலின்' என்று மாணவர்கள் பதில் கூறினர்.
அடுத்ததாக, அங்கிருந்த பெண்களிடம், 'மகளிர் உரிமைத் தொகை வாங்குபவர்கள் மட்டும் கையை துாக்குங்கள்' என கூறியதும், பெண்கள் பலர் கையை உயர்த்தினர். அவர்களிடம், 'மகளிர் உரிமைத் தொகையை வழங்குவது யார்?' என்று கேட்டதற்கு, 'ஸ்டாலின்' என்று பெண்கள் பதில் கூறினர்.
தொடர்ந்து, 'உதவித் தொகை கிடைக்காத பெண்கள் மட்டும் கையை துாக்குங்கள்' என்று கேட்ட உடன், ஒரு சில பெண்கள் கையை துாக்கினர்.
அவர்களை மேடைக்கு அழைத்து, விண்ணப்பித்த முறை குறித்த கேட்டறிந்தார்.
பின், பஞ்சாயத்து தலைவரை அழைத்து, உதவித் தொகை பெறாத பெண்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று என்னிடம் கொடுங்கள், அவர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்' என அமைச்சர் மஸ்தான் தெரிவித்துவிட்டு புறப்பட்டார்.

