/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : செப் 18, 2025 11:17 PM

விழுப்புரம்: கோலியனுார் ஒன்றியத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை, லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
மாவட்டத்தில், திட்ட முகாம் கடந்த ஜூலை,15ம் தேதி துவங்கியது. இந்த முகாமில், 15 துறைகள் சார்பில் பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கி வருகின்றனர்.
இதில் மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார் சேவை, இ-சேவை ஆகிய சேவைகளும், மகளிர் உரிமை தொகை கோரும் பெண்கள் நேடியாக விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களோடு பதிவு செய்கின்றனர்.
விழுப்புரம் அருகே கோலியனுார் ஒன்றியம், பொய்யப்பாக்கம், சாலை அகரம், மேல்பாதி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கான திட்ட முகாம் நேற்று நடந்தது.
கோலியனுார் அலங்கார் மண்டபத்தில் நடந்த முகாமிற்கு லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர், பொதுமக்களிடம் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மனுக்கள் பெறுவதை பார்வையிட்டார். இதில், கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சக்கரவர்த்தி, ஊராட்சி தலைவர் மணிவேல், ஒன்றிய பிரதிநிதி ராஜாமணி, கவுன்சிலர் வசந்தி சந்திரசேகர், இளைஞரணி துணை அமைப்பாளர் வசந்தராஜ், முன்னாள் தலைவர் பெருமாள், கிளை செயலாளர்கள் அய்யனார், தர்மராஜ், முத்து உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .