/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சீனிவாசபெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா
/
சீனிவாசபெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : செப் 15, 2025 02:35 AM

வானுார்: இடையஞ்சாவடி சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.
வானுார் அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந் துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த 12ம் தேதி லட்சுமி ஹோமம், கோ பூஜையுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை 8;30 மணிக்கு 108 மூலிகை ஹோமமும், மாலை 5;00 மணிக்கு யாகசாலை ஆராதனமும், இரவு 7;00 மணிக்கு மூலவர் உற்சவர் திருமஞ்சனமும் நடந்தது.
நேற்று காலை 8:45 மணிக்கு விமான மகா கும்பாபிேஷகம் நடந்தது. இரவு 7;00 மணிக்கு பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவில், வார்டு கவுன்சிலர் ஜெயந்தி ரமேஷ், ஊராட்சி தலைவர் வசந்தி கபாலி உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை நாட்டாண்மைகள் ரமேஷ், ஆனந்தன், ராமானுஜம், கிருஷ்ணமூர்த்தி, செல்வம், மலையாளத்தார், நாகமுத்து, வடிவு, சுரேஷ், அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர்.