ADDED : டிச 29, 2025 06:09 AM

விழுப்புரம்: இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் 'எனது இளையோர் பாரதம்' சார்பில் விழுப்புரம் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் அசோகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட இளையோர் அலுவலர் சஞ்சனா வாட்ஸ், இந்திய கலாசார நட்புறவு கழக மாநில துணைத் தலைவர் சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் ரவிசங்கர், ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட கன்வீனர் பாபு செல்வதுரை, இளையோர் அலுவலக அலுவலர் காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சுந்தர் நன்றி கூறினார்.

